சுதாவின் அடுத்த பட ஹீரோ சிம்பு! - ‛வேட்டை நாய்' நாவல் படமாகிறது!
ADDED : 158 days ago
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார் சுதா கெங்கரா. ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை முடித்ததும் வேட்டை நாய் என்ற நாவலை திரைப்படமாக உருவாக்கும் சுதா, அந்த படத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். தற்போது மூன்று படங்களில் அடுத்தடுத்து நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கும் சிம்பு, அந்த படங்களை முடித்துவிட்டு சுதா இயக்கும் படத்தில் நடிக்க போகிறார்.