உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ்

70 வருட காஞ்சிபுரம் பட்டு சேலையுடன் பூஜா ஹெக்டே போட்டோஸ்

பெண்களின் அலமாரிகளில் முக்கிய இடம் வகிப்பது காஞ்சிபுரம் பட்டு. அவரவர் வசதிக்கேற்ப விலை உயர்ந்த ஒரு காஞ்சிபுரம் பட்டு எடுத்து தங்கள் 'புடவை கலெக்ஷனில்' சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களது ஆசை. அந்த ஆசை இன்று நேற்றல்ல, காலம் காலமாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு பட்டுப் புடவைகளில் தனி இடத்தைப் பிடித்திருப்பது காஞ்சிபுரம் பட்டு.

இன்றைய கதாநாயகியரில் எந்த ஆடை அணிந்தாலும் அதில் தனி அழகுடன் ஜொலிப்பவர் பூஜா ஹெக்டே. மாடர்ன் உடையானாலும், புடவை ஆனாலும் அவரது வசீகரமே தனி.

70 வருட காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்து போட்டோ ஷுட் எடுத்து அவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். “70 வருட பழமையான ஒரு அழகிய புடவை. எனது அழகான காஞ்சிபுரம் பாட்டியின் புடவை, என்னை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. முதல் மழைக்குப் பிறகு ஈரமான மங்களூருவின் சேற்று வாசம், திருமணத்திற்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் மல்லிகையின் புதிய வாசனை… ஓ… எளிமையான விஷயங்களில் எத்தனை அழகு,” என அந்த 70 வருட புடவை அணிந்த அனுபவத்தை அற்புதமாகப் பதிவிட்டுள்ளார்.

அந்த அழகுடன் அவருடைய வெட்கமும் ஒரு 'ரெட்ரோ' அழகுதான்...


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !