சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ்
ADDED : 190 days ago
நடிகை சமந்தா தெலுங்கில் தயாரித்துள்ள முதல் படம் சுபம். இதில் ஹர்ஷித் மல்கிரி ரெட்டி, சிரியா கோந்தம், சரண் பெரி, ஷாலினி கொண்டேபுடி, ஷ்ராவாணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடத்து இருக்கிறார்கள். பிரவீன் கந்த்ரேகுலா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் வாங்கியுள்ளது. மூன்று நண்பர்கள், அவர்களுக்கு திருமணம் ஆன பின்னர் மனைவிகள் மூலம் அவர்களுக்குள் எழும் பிரச்னைகளை ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாக்கி உள்ளனர். இந்த படம் வருகிற மே ஒன்பதாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளராக சமந்தா களமிறங்கியுள்ள இந்த முதல் படம் அவருக்கு வெற்றியை கொடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.