3000 தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ
ADDED : 204 days ago
சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜ் ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 01 அன்று தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெட்ரோ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 3000 அரங்குகள் வரை வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 500 அரங்குகளுக்கு மேல் வெளியாகிறது. 2டி என்டர்டெயின்ட்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படம் முன்பதிவில் ஓரளவுக்கு வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து கோடை விடுமுறை என்பதால் இந்த திரைப்படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் நல்ல வசூல் சாதனை புரியும் என்பதே பல திரையரங்க உரிமையாளர்களின் கருத்தாக நிலவுகிறது.