அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில்
ADDED : 155 days ago
தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, அயலான், இந்தியன் 2, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு, ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக உள்ளார். தனது காதலரான ஹிந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ‛உங்களை அழகாக காட்ட ஏதேனும் அறுவை சிகிச்சை செய்துள்ளீர்களா?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்படி இதுவரை நான் எந்த ஒரு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டதில்லை. காரணம் கடவுள் எனக்கு நிறைய அழகை கொடுத்திருக்கிறார். அதனால் மேலும் என்னை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படவில்லை. அதற்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வோர்களை நான் தவறு என்று சொல்லவில்லை. அது அவர்களது விருப்பம் என்று பதில் கூறியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.