300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி
ADDED : 198 days ago
சசிகுமார், சிம்ரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து, அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நாளை(மே 1) உலகமெங்கும் வெளியாகும் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. இந்த படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் போடப்பட்டது. இந்த காட்சியை பார்த்த அனைவரும் வெகுவாக படக்குழுவை பாராட்டியுள்ளனர். இந்த விமர்சனத்தால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 300 தியேட்டர்கள் வரை வெளியாகுமென்று திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால் படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியடையும் என்பதே இங்கு பலரின் கருத்தாக நிலவுகிறது. இலங்கையில் இருந்து சென்னைக்கு அகதிகளாக வரும் குடும்பம் பற்றிய கதை. காமெடி உடன் கூடிய உணர்வுப்பூர்வமான கதையில் இந்த படம் உருவாகி உள்ளது.