மாலத்தீவில் பார்வதி நாயர் ஹனிமூன் கொண்டாட்டம்
ADDED : 155 days ago
மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழில் 'நிமிர்ந்து நில்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு உத்தம வில்லன், என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சரியான வாய்ப்புகள் இல்லை.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் தேனிலவு பயணமாக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் ஹாலிவுட் நடிகைகள் ஸ்டைலில் கணவருடன் பிகினி உடையில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார். அந்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவை வைரலாக பரவி வருகிறது.