ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு!
ADDED : 154 days ago
இன்று மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெய்யின் புதிய படத்தின் அப்டேட் வெளியானது. அதன்படி, வினய் கிருஷ்ணா இயக்கத்தில் ஜெய் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு 'வொர்கர்' என தலைப்பு வைக்கப்பட்டதாக டைட்டில் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். யோகி பாபு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ரொமான்டிக் ஆக்சன் த்ரில்லர் கதை களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.