உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ?

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ?

நேற்றைய தினம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் வெளியானது. 80களின் காலகட்ட பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், சூர்யாவிற்கு ஒரு கம்பேக் என்று சொல்லும் விதமாக அமைந்துள்ளது என்றே ரசிகர்களும் விமர்சகர்களும் கூறி வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் நடிகர் நானி நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள ஹிட்-3 என்கிற படமும் நேற்று வெளியானது. இந்த படங்கள் ஹிந்தி மொழியில் வெளியானாலும் கூட இதன் ஹிந்தி பதிப்புகள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை. காரணம் ஓடிடி நிறுவனங்களுடன் இந்த படங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் தான்.

அதாவது படம் வெளியாகி 28 நாட்கள் வரை படங்களை ஓடிடிக்கு கொடுக்கக் கூடாது என்கிற நிபந்தனையை மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கடைபிடித்து வருகின்றன. ஆனால் இந்த இரண்டு படங்களும் 28 நாட்களுக்கு முன்பாகவே இந்த படங்களை ஓடிடியில் வெளியிடலாம் என்று ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் இந்த இரண்டு படங்களின் ஹிந்தி பதிப்புகளை மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் திரையிடவில்லை என்று தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !