மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
151 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
151 days ago
'டூயட்' படத்தில் பிரகாஷ்ராஜ், 'தில்' படத்தில் ஆசிஷ் வித்யார்த்தி என வெகு சிலர் மட்டுமே தாங்கள் அறிமுகமான முதல் படத்திலேயே யாருய்யா இந்த வில்லன் என கேட்டு ரசிகர்களை பிரமிக்க வைத்தவர்கள். அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்' படத்தில், ஜார்ஜ் சார் என்கிற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வில்லத்தனத்தின் மொத்த உருவமாக தன்னை ரசிகர்களிடம் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ் வர்மா. ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு யார் இந்த ஜார்ஜ் சார் என்று கூகுளில் தேடும் அளவிற்கு தான் அறிமுகமான இந்த முதல் படத்திலேயே பிரபலமாகிவிட்டார் பிரகாஷ் வர்மா.
இத்தனைக்கும் இவருக்கு சினிமா புதிது அல்ல; பல விளம்பர படங்களை இயக்கியவர்.. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வோடபோன் விளம்பரம் இவர் இயக்கியதுதான். சில படங்களில் கலை உருவாக்கத்தில் பங்களிப்பை செய்துள்ளார். இருந்தாலும் இதுநாள் வரை கேமராவுக்கு பின்னாலே நின்றிருந்த இவரை இயக்குனர் தருண் மூர்த்தி தான். தொடரும் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது நம்பிக்கையை வீணாக்காமல் பிரகாஷ் வர்மாவும் நூறு சதவீதம் அதை சாதித்துள்ளார்.
ஆனால் தனக்கு இந்த அளவிற்கு பெயர் கிடைத்ததற்கு காரணம் படத்தின் ஹீரோவான மோகன்லால், எந்தவித ஈகோவும் இன்றி தனக்கு நடிப்பதற்கான சுதந்திரத்தையும் அதே சமயம் நடிப்பு குறித்த பல நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக் கொடுத்தது தான் என்று கூறியுள்ளார் பிரகாஷ் வர்மா. ''நான் பார்த்து பிரமித்த என்னுடைய ஹீரோ, என்னுடைய இன்ஸ்பிரேஷன், என்னுடைய வழிகாட்டி, என்னுடைய சகோதரர், ஒரு ஆசிரியர், ஒரு நண்பர் என எல்லாமே மோகன்லால் சார் தான் என்று கூறுவேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் நடிகர் பிரகாஷ் வர்மா.
151 days ago
151 days ago