மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
151 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
151 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
151 days ago
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும், தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'வாரிசு' படத்தின் தயாரிப்பாளருமான தில் ராஜு ஹைதராபாத்தில் 'லார்வென் ஏஐ ஸ்டுடியோ' என்ற முழுமையான 'ஏஐ' ஸ்டுடியோ ஒன்றைத் திறந்துள்ளார்.
நேற்று நடந்த திறப்பு விழாவில் தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில் துறை அமைச்சர் ஸ்டுடியோவைத் திறந்து வைத்தார். தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் சிலர் விழாவில் கலந்து கொண்டனர்.
தில் ராஜு நிகழ்ச்சியில் பேசுகையில், “ஏஐ' ஸ்டுடியோவைத் தொடங்க வேண்டும் என்ற யோசனை எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. சினிமாவில் 'ஏஐ' பயன்பாட்டை விரிவாக ஆராய 'குவாண்டம் ஏ' நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினேன்.
ஒரு திரைப்படத்தின் முன் தயாரிப்பு, பின் தயாரிப்பு மற்றும் புரமோஷன் உட்பல அனைத்துப் பிரிவுகளிலும் முன்னோக்கிச் செல்ல ஏஐ பயன்படும். ஒரு ஸ்கிரிப்ட் தயாரானதும், அதன் காட்சிகளை சவுண்ட் உடன் சேர்த்து 'ஏஐ' மூலம் முன்காட்சிப்படுத்தி பார்க்க முடியும். அதுதான் எங்கள் முதன்மை குறிக்கோள்.
ஏஐ எதிர்காலத்தில் இன்னும் பல புதுமைகளை அறிமுகப்படுத்தும், படங்களின் வெற்றி விகிதத்தை மேம்படுத்தும். ஏஐ நுட்பத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நேரத்தை மிச்சப்படுத்தலாம். தயாரிப்பாளர்களின் செலவுகளும் குறையும். இதனால், அதிக தரமான படங்களை உருவாக்க இயலும். ஏஐ என்பது உணர்வுகள் இல்லாத ஒரு உதவி இயக்குனர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
151 days ago
151 days ago
151 days ago