மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்!
ADDED : 154 days ago
‛பகல் நிலவு, சரவணன் மீனாட்சி சீசன் -3, ராஜா ராணி, ரெட்டை ரோஜா' என பல சீரியலில் நடித்தவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு ‛பிக்பாஸ் சீசன்-3 ' நிகழ்ச்சியில் பங்கேற்றவர், ‛விக்ரம், வீட்டில விசேஷம், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என பல படங்களில் நடித்தார். என்றாலும் எதிர்பார்த்தபடி சினிமாவில் வாய்ப்புகள் இல்லாததால் தற்போது மாடலிங் துறையில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஷிவானி நாராயணன். இது குறித்த ஒரு வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் வெளிர் பச்சை நிறத்தில் புதுமையான டிசைனில் வடிவமைக்கப்பட்ட ஆடை அணிந்து அவர் கேட்வாக் செய்த காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த கேட்வாக் வீடியோ ஆறு லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.