சூர்யாவின் ரெட்ரோ ஓடிடி விலை எவ்வளவு
ADDED : 198 days ago
சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுயிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. ஜோஜு ஜார்ஜ், சிங்கம் புலி, கருணாகரன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் ஓடிடி உரிமை கடந்த வருடம் ஏப்ரல் மாதமே வியாபாரமாகியுள்ளது.
நாம் விசாரித்த தகவலின்படி இந்த ரெட்ரோ திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சுமார் 60 கோடிக்கு வரி உட்பட சேர்த்து வாங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்த ஓடிடி வாங்கிய விலையால் படத்துக்கு பெரிய லாபம் என்றே கருதப்படுகிறது.