மீண்டும் குடும்பஸ்தன் கூட்டணி
ADDED : 150 days ago
இந்த ஆண்டு வெளியான படங்களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு, நல்ல லாபம் கொடுத்த படம் குடும்பஸ்தன். ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி இருந்தார். மணிகண்டன் ஹீரோவாக நடித்தார். ஒரு படம் வெற்றி அடைந்தால் அதே கூட்டணி மீண்டு இணைவது தமிழ் சினிமாவில் வாடிக்கை.
குடும்பஸ்தன் படத்தை தயாரித்த சினிமாகாரன் நிறுவனம் மீண்டும் அதே இயக்குனரை வைத்து ஒரு படமும், மணிகண்டனை வைத்து இன்னொரு படமும் தயாரிக்க உள்ளது. தவிர குடும்பஸ்தன் 2 உருவாகவும் வாய்ப்பு இருக்கிறதாம்.
மணிகண்டன் அடிப்படையில் ஸ்கிரிப்ட், வசனங்கள் மீது அதிக ஆர்வம் உள்ளவர். எழுத்தாளர் என்பதால், தான் நடிக்கும் படங்களின் கதை விவாதம், வசனங்கள் உருவாக்கும் பணிகளிலும் உடன் இருக்கிறாராம். ஏற்கனவே விஸ்வாசம், விக்ரம் வேதா, தம்பி படங்களுக்கு மணிகண்டன் வசனம் எழுதி இருக்கிறார்.