த்ரிஷாவின் இரண்டு ஆசைகள்
ADDED : 151 days ago
சில தினங்களுக்கு முன்பு தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார் த்ரிஷா. இப்போதும் பிஸியாக முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டு இருக்கிறார். அவர் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் மனதில் நிறைவேறாத அல்லது விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை இரண்டு இருக்கிறதாம்.
ஒன்று, விரைவில் 10 கோடி சம்பளம் வாங்க வேண்டும். இரண்டாவது, 100 படங்களை முடிக்க வேண்டும். இப்போது 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் த்ரிஷா. அதேபோல் 83 படங்களில் நடித்துவிட்டார். சில ஆண்டுகளில் தனது இந்த 2 ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைக்கிறாராம். தமிழில் 10 கோடி சம்பளம் பெற்ற ஒரே ஹீரோயின் நயன்தாரா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.