தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன?
ADDED : 149 days ago
2025 இந்த வருட தீபாவளிக்கு விஜய், அஜித், ரஜினி, கமல் படங்கள் வெளிவராது. அதனால் அவர்களின் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி ஏமாற்றம் தான்.
இவ்வருட தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதியன்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் படம் வெளியாகிறது என முதல் படமாக அறிவித்துள்ளனர்.
இவை தவிர்த்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரின் 45வது படமும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என ஆகிய படங்களை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி பார்க்கையில் இப்போதைக்கு இந்த மூன்று படங்கள் தீபாவளி ரேஸில் உள்ளன. இன்னும் 5 மாதங்கள் இருப்பதால் மேலும் சில படங்கள் இந்த ரேஸில் இணையலாம்.