உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம்

அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம்

நடிகை சமந்தா தயாரித்துள்ள முதல் படமான 'சுபம்' படத்தின் நிகழ்ச்சி விசாகப்பட்டிணத்தில் நடந்தது. அப்போது தனது கண்களை அவர் அடிக்கடி துடைத்துக் கொண்டிருந்தது, ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மகிழ்ச்சியில் கண் கலங்கினாரா அல்லது வேறு ஏதாவது சோகமா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் அது குறித்து விளக்க வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் சமந்தா. அதில், “அதிக வெளிச்சமுள்ள லைட்டிங்கில் எனது சென்சிட்டிவ்வான கண்கள் பாதிக்கப்படுகிறது. அதனால், கண்களில் இருந்து கண்ணீர் கசிகிறது. அதனால்தான் நான் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தேன். வேறு எந்த எமோஷனல் காரணமும் அல்ல, நான் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு சமந்தாவிற்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வந்தது. அதனால், சினிமாவில் நடிப்பதை சிறிது காலம் தவிர்த்திருந்தார். பின்னர் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சைகளை மேற்கொண்டார். தற்போது அதிக வெளிச்சத்தால் அவரது கண்கள் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !