உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 6 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் கோவை சரளா

6 ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் கோவை சரளா

நடிகை கோவை சரளா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தமிழ் கடைசியாக கங்குவா படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் அங்குள்ள காமெடி நடிகர் பிரமானந்தத்துக்கு ஜோடியாக நிறைய படங்களில் நடித்திருக்கிறார் கோவை சரளா. இந்த நிலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2019ம் ஆண்டில் பிரபு தேவா - தமன்னா நடித்த நகைச்சுவை படமான அபிநேத்ரி-2 வுக்கு பிறகு தெலுங்கில் நடிக்காத அவர், தற்போது தேவிகா அண்ட் டேனி என்ற வெப்சீரிஸில் நடிக்கிறார் . ரிது வர்மா கதையின் நாயகியாக நடித்து வரும் இந்த தொடரில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் கோவை சரளா. இந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதை சுதாகர் சாகந்தி என்பவர் தயாரித்து இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !