மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
147 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
147 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
147 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
147 days ago
பஹல்காம் நகரில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
பஹல்காமில் பயங்காரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் கணவனை இழந்த பெண்கள் என்ற செய்தி இந்திய மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கணவனை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பறி கொடுத்த அந்தப் பெண்களுக்கும் நியாயம் ஏற்படுத்திரும் விதமாகத்தான் 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது என்கிறார்கள். ஹிந்தியில் 'சிந்தூர்' என்றால் தமிழில் 'குங்குமம்' என்று அர்த்தம். இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் குங்குமம் என்பது சென்டிமென்ட் சார்ந்த ஒன்று.
அதனால், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரை தங்களது படத்திற்காகக் பதிவு செய்ய ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பலர் பதிவு செய்ய விண்ணப்பம் தந்துள்ளார்களாம். கடந்த இரண்டு நாட்களாக இந்தப் பெயர் இந்திய அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், இந்தியர்களால் அதிகம் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராக உள்ளது. இது எதிர்கால ராணுவ வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் நிலைத்து நிற்கும் அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் முதலில் விண்ணப்பித்திருந்தார்களோ அவர்களுக்குத்தான் இந்தப் பெயர் முறைப்படி தரப்படும். அப்படி பெறப் போகிறவர் யார் என்பது சில தினங்களில் தெரிந்துவிடும்.
147 days ago
147 days ago
147 days ago
147 days ago