விஜய் பிறந்தநாளில் 'ஜனநாயகன்' அறிமுக டீசர் வெளியாகிறது?
ADDED : 149 days ago
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் விஜய், 'தளபதி வெற்றி கொண்டான்' என்ற பெயரில் நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. அதனால் அந்த பெயரை சுருக்கி 'டிவிகே' என்றே அனைவரும் அவரை அழைப்பார்களாம்.
இந்நிலையில் தற்போது 'ஜனநாயகன்' படத்தின் அறிமுக டீசரை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜாஹெக்டே, ஸ்ருதிஹாசன், மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.