உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி?

பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி?


தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நடிப்பில் கடந்த மே ஒன்றாம் தேதி 'ஹிட்- 3' என்ற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு ரொமான்டிக் கதைகளிலேயே அதிகமாக நடித்து வந்த நானி, தற்போது மாறுபட்ட கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். இந்த நேரத்தில் நடிகர் நானி தன்னுடைய பெயரை மாற்றம் செய்யப் போவதாக டோலிவுட் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது.

நானியின் நிஜப்பெயர் கண்டா நவீன் பாபு என்பதாகும். ஆனால் சினிமாவில் ஆரம்பத்திலிருந்தே நானி என்ற பெயரில்தான் நடித்து வருகிறார். அதோடு தெலுங்கு சினிமாவில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி என்றும் அவர் அழைக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் திடீரென்று அவர் பெயரில் மாற்றம் செய்யப் போவதாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது விரைவில் தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !