அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல்
ADDED : 149 days ago
தற்போது தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தை தயாரித்திருக்கிறார் சமந்தா. இதையடுத்து தான் நடிக்கும் 'மா இண்டி பங்காரம்' படத்தையும் தயாரித்து நடிக்கப் போகிறார். இந்த நிலையில் 'புஷ்பா-2' படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்குவதாக செய்திகள் வெளியானதில் இருந்தே, அந்த படத்தில் சமந்தாவும் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் தற்போது அது குறித்த ஒரு கேள்விக்கு சமந்தா பதிலளிக்கையில், ''அட்லியும் நானும் சில படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். எதிர்காலத்திலும் இணைந்து பணியாற்ற போகிறோம். என்றாலும் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அவர் இயக்கும் படத்தில் நான் இடம் பெறவில்லை'' என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.