கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி
இந்தியாவின் கலைஞர்களுக்கான முதல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். 'குங்குனாலோ' என பெயரிடப்பட்டுள்ள இச்செயலி, டலாசிரியர்கள் ஜாவேத் அக்தர், சமீர் அஞ்சான்,பாடகர்களான சங்கர் மகாதேவன், ஹரிஹரன், சோனு நிகம், பிரசூன் ஜோஷி, சலீம் மெர்ச்சன்ட், அருணா சாய்ராம், ஆனந்த் - மிலிந்த், மனன் ஷா, ராஜு சிங் மற்றும் இசைத்துறையைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பிரபலங்களின் முன்னிலையில் துவங்கப்பட்டுள்ளது.
இசைத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்காவே உருவாக்கப்பட்ட இந்த செயலி வெறும் இசைக்கு மட்டும் இல்லாமல், கவிதை, கதைசொல்லல் மற்றும் பிற படைப்புகளை வெளிப்படுத்துதல் போன்றவைகளையும் உள்ளடக்கியுள்ளது. இச்செயலியின் நிறுவன உறுப்பினர்களாக ஜாவேத் அக்தர், சங்கர் மகாதேவன், சோனு நிகம், ஸ்ரேயா கோஷல், அரிஜித் சிங், பிரசூன் ஜோஷி, சமீர் அஞ்சான், விஷால் தட்லானி, அமித் திரிவேதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செயலி வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட ஜாவேத் அக்தர், ''இந்த செயலி கலைஞர்களுக்கு அவர்களின் விருப்பப்படி உருவாக்க சுதந்திரத்தை வழங்குகிறது. எந்த தயாரிப்பாளர் அல்லது இசை நிறுவனத்தின் நிபந்தனைகளும் இருக்காது, மாறாக கலைஞர்கள் தங்கள் ஆன்மாவிலிருந்து இசையை உருவாக்க முடியும். இசைக்கலைஞர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் என நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளோம். குங்குனாலோ செயலியில் கலைஞர்கள் முழுமையான படைப்பு சுதந்திரத்துடன் பாடல்களை உருவாக்குவார்கள், எந்தக் குழுவும் அவர்களின் படைப்புகளைச் சரிபார்க்காது. இதன் மூலம் புதிய பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் கிடைப்பார்கள்'' என்றார்.
சங்கர் மகாதேவன் பேசுகையில், ''இந்த தளம் கலைஞர்களுக்காகவும் கலைஞர்களாலும் உருவாக்கப்பட்டது. இசையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவதற்கான ஒரு தளம் இது. இன்று நம் அனைவருக்கும் கலைஞர்களுக்கு மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். அனைத்து கலைஞர்களின் கனவும் இந்த தளத்தின் மூலம் நிறைவேறப் போகிறது. ஒவ்வொரு வெற்றிகரமான மற்றும் பிரபலமான கலைஞருக்கும் குங்குனாலோ மூலம் வித்தியாசமான ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் என்று பேசினார்.
90களில், நான் மும்பைக்கு வந்தபோது, நாங்கள் இன்னும் வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினோம். இப்போது குங்குனாலோ நாங்கள் தேடிய படைப்பு சுதந்திரத்திற்கான தளமாகும் என்று சோனு நிகம் கூறினார்.
இந்த தளம் மற்ற தளங்களிலிருந்து வேறுபட்டது, ஏனெனில் கலைஞர்களே நிறுவனத்தின் உரிமையாளர்கள். குங்குனாலோவில் சில சிறந்த இசையை உருவாக்க நான் நம்புகிறேன் என்று ஹரிஹரன் கூறினார்.