உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட்

பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட்

ரெட்ரோ படத்திற்கு பின் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். த்ரிஷா கதாநாயகியாக நடிக்கின்றார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத சூழலில் வருகிற ஜூலை 23ல் சூர்யா பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !