லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி
ADDED : 146 days ago
கமல், விஜய், ரஜினி என தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். மறுபுறம் லோகேஷ் கனகராஜ் அவரது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார்.
கடந்த வருடத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2வது படமாக 'பென்ஸ்' படத்தை அறிவித்தார். லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்குவதாகவும், இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் அறிவித்தனர்.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றும் இன்னும் இதன் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதற்கு சாய் அபயன்கர் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் இதில் லாரன்ஸ் உடன் இணைந்து நடிக்க நடிகர்கள் மாதவன் மற்றும் நிவின் பாலி இருவரும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.