சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்!
ADDED : 46 days ago
நடிகர் சூர்யாவின் 47வது படத்தை இயக்குவது மலையாளத்தில் வெளியான 'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார் என்கிறார்கள்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றார் ஜித்து மாதவன். இந்த படத்தில் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளார் மற்றும் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் பகத் பாசில், நஸ்லின் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதத்தில் துவங்க திட்டமிட்டு பணிகளைக் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.