உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்!

ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்!


தெலுங்கு நடிகர் பிரபாஸ், பான் இந்தியா நடிகராக வலம் வருகிறார். இவர் கைவசமாக ‛தி ராஜாசாப், பவுஸி, ஸ்பிரிட், கல்கி ஏ.டி.2898- 2ம் பாகம்' ஆகிய படங்கள் உள்ளன. இந்த வரிசையில் பிரபாஸ் அடுத்து நடிப்பதற்கான புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த புதிய படத்தை தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடன இயக்குநர் பிரேம் ரக்சித் என்பவர் இயக்கவுள்ளார். இவர் நடன இயக்குனராக பணியாற்றிய ‛நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் தமிழில் ‛அழகிய தமிழ்மகன், சுறா, வேலாயுதம்' ஆகிய படங்களிலும் ஒரு சில பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !