உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு!

மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு!


இயக்குனர் பேரரசு தமிழில் ‛திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, தர்மபுரி' போன்ற படங்களை இயக்கியவர். கடந்த 2015ம் ஆண்டில் இவர் இயக்கத்தில் ‛திகார்' எனும் படம் வெளியானது. ஆனால், அது எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கின்றார் பேரரசு. அடுத்து அவர் குறைந்த பொருட்செலவில் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படத்தை இயக்கவுள்ளார். இது குறித்து ஜனவரி மாதத்தில் அப்டேட் வெளியாகும் என சமீபத்தில் ஒரு பேட்டியில் பேரரசு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !