உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'

டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்'


நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இயக்குநர் போயபதி ஸ்ரீனு கூட்டணி, 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படம் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர்.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் சம்யுக்தா நாயகியாகவும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும் நடித்துள்ளனர். ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் சூழலில், பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால், புரமோஷன் பணிகளையும் விரைவில் படக்குழு துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !