உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!!

‛ஜனநாயகன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் விஜய்! லீக் அவுட் ஆன புகைப்படம்!!


தற்போது எச்.வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தளபதி வெற்றிக் கொண்டான் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் போலீஸ் கெட்டப்பில் நிற்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ‛தெறி' படத்தில் போலீசாக நடத்திருந்த விஜய் அதன் பிறகு இப்போது மீண்டும் ஜனநாயகனில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த செய்தி விஜய் ரசிகர் வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், 2026 பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் இந்த ‛ஜனநாயகன்' படத்தின் ஓடிடி உரிமையை 121 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !