மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
140 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
140 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
140 days ago
நடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாளை கிண்டல் செய்யும் பாடல் இருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலத்தில் வக்கீல்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து சென்னையில் நடிகர் சந்தானம் பேசுகையில்,
நான் திருப்பதி பெருமாள் பக்தன். ஒவ்வொரு பட ரிலீஸ் சமயத்தில் திருப்பதிக்கு வேண்டுதலாக நடந்து செல்வேன். இந்த பட ரிலீஸ் சமயத்திலும் அது நடக்கும். நானும் இயக்குனரும் திருமலைக்கு நடந்து செல்கிறோம். தவிர நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். இந்த பட பாடலில் பெருமாளை, கோவிந்தா பாடலை கிண்டல் செய்யவில்லை. சென்சார், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே அந்த பாடல் இருக்கிறது. அவர்களுக்கு பதில் சொன்னால் போதும். மற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. என் படத்தில் பெருமாள் பாடல் வர வேண்டும் என்பதற்காக அந்த பாடல் வைத்தோம்.
எல்லையில் பதற்றம் இருக்கிறது. ஒருவேளை இந்த நிகழ்ச்சியை தள்ளி வைத்து தான் ஆக வேண்டும் என்றால் செய்ய வேண்டும் என பேசிக் கொண்டோம். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. அதனால் நிகழ்ச்சி நடக்கிறது. தயாரிப்பாளர் ஆர்யா எனக்கு கேட்டதை விட அதிகமாக கொடுத்து விட்டார். தயாரிப்பாளராக இருக்கும்பொழுது ஆர்யாவுக்கும் எனக்கும் சண்டை வரும். எனக்கு ரொம்ப போர் அடித்தால் ஈஷா கிளம்பி போய் விடுவேன். அப்போது ஆர்யா சத்குரு கிட்ட காசு வாங்கி தா கூறுவார்.
இந்த படத்தில் வரும் காக்க காக்க பட உயிரின் உயிரே பாடலை பார்த்து சூர்யா, ஜோதிகா கோபப்படமாட்டார்கள், சூர்யா ரசிகர்களும் கோபப்பட மாட்டார்கள். காரணம் அந்த பாடலை எடுத்த கவுதம் மேனன் அதில் நடித்து இருக்கிறார். தவிர டிரைலர் பார்த்துவிட்டு ஜட்ஜ் பண்ண வேண்டாம். படம் பார்த்தால் அந்த பாடல் முக்கியத்துவம் புரியும்.
நண்பன் சிம்புக்காக மீண்டும் அவர் படத்தில் காமெடியனாக நடிக்கிறேன். அதேபோல் நண்பர் பார்த்தா வா, எனக்காக பிரச்சாரம் செய் என உதயநிதி அழைத்தால் எனக்கு சில விஷயங்கள் செட்டானால் அவருக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். இதில் எனக்கு அம்மாவாக கஸ்தூரி நடித்து இருக்கிறார். அவருக்கு அந்த கேரக்டர் பிடித்து இருந்ததால் நடிக்க ஓகே சொன்னார்..அவர் போர்ஷனை ரசிப்பீர்கள். இதில் யார் கெஸ்ட் ரோலில் நடித்தார்கள் என்பது சஸ்பென்ஸ் என்றார்.
140 days ago
140 days ago
140 days ago