நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர்
ADDED : 143 days ago
இயக்குனரின் ஷங்கரின் மகளான அதிதி தமிழில் விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மாவீரன், நேசிப்பாயா போன்ற படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் ஜோடியாக பைரவம் என்ற படத்தில் நடித்து, அங்கு நாயகியாக அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்க, மே 30ல் படம் ரிலீஸாகிறது.
அதிதி கூறுகையில், ‛‛விருமன் படத்தை பார்த்து இப்பட இயக்குனர் விஜய் இந்த வேடத்திற்கு நான் சரியாக இருப்பேன் என வாய்ப்பு வழங்கினார். தெலுங்கில் நடிப்பது கஷ்டம் என நினைத்தேன். ஆனால் நடிக்கும்போது அப்படி தோன்றவில்லை. சின்ன வயதில் அப்பாவுடன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு வந்துள்ளேன். ஆனால் என் படத்தின் படப்பிடிப்புக்கும் அங்கு வருவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை, கனவு போல் உள்ளது'' என்றார்.