சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி
ADDED : 141 days ago
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக் ஷன், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பரவலாக நடித்து வரும் இவர் தற்போது சூரிக்கு ஜோடியாக ‛மாமன்' படத்தில் நடித்துள்ளார். ஒரு சிறுவனுக்கும், அவனது தாய்மாமனுக்கும் இடையே நடக்கும் பாசத்தை வைத்து குடும்ப படமாக எடுத்துள்ளனர். பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். ராஜ்கிரண், சுவாசிகா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மே 16ல் படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது : ‛‛சூரி மிகவும் நேர்மையான மனிதர். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நன்மை உள்ளது. அவர் பேசும் வார்த்தைகளிலும் அன்பு, மரியாதை உள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு பெருமையாக உள்ளது'' என்றார்.