உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தக்லைப் பட அப்டேட் - மே 17ல் டிரைலர்; 24ல் இசை வெளியீடு

தக்லைப் பட அப்டேட் - மே 17ல் டிரைலர்; 24ல் இசை வெளியீடு


மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் 'தக்லைப்'. அவருடன் சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படம் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை விழா மே 16ம் தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதட்டம் ஏற்பட்டு வந்ததால் இசை வெளியீட்டு விழா தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்திருந்தார் கமல்ஹாசன்.

இந்நிலையில் தற்போது போர் பதட்டம் ஓய்ந்து விட்டதால், தக்லைப் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 24ம் தேதி சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவித்திருக்கிறார். இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏ. ஆர். ரஹ்மானின் கச்சேரியும் நடைபெற உள்ளது. முன்னதாக இப்படத்தின் டிரைலர் மே 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !