ஹிந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெறும் ஸ்ரீலீலா
ADDED : 140 days ago
ஹிந்தியில் கரண் ஜோகர் தயாரிப்பில் ‛தோஸ்தானா 2' படம் உருவாவதாகவும், இதில் கார்த்திக் ஆர்யன், ஜான்வி கபூர், லக் ஷய் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் இப்படம் துவங்கவில்லை. தற்போது புதிய நடிகர்களுடன் இப்படம் மீண்டும் துவங்குகிறது. இதில் லக் ஷய், விக்ராந்த் மாஸி ஆகியோருடன் நடிகை ஸ்ரீலீலாவும் இணைகிறார். தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெறுகிறார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா தமிழில் பராசக்தி படம் மூலம் அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.