மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
140 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
140 days ago
'சூது கவ்வும்', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் லியோ ஜான் பால். இவர் இப்போது இயக்குனராக களமிறங்கி உள்ள படம் ‛மார்கன்'. விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, தீப்ஷிகா, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் இப்படம் மூலம் வில்லனாக களமிறங்குகிறார்.
குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக இப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வரும் நிலையில் வரும் ஜூன் 27ம் தேதி படம் ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையும் அமைத்துள்ளார்.
140 days ago
140 days ago