மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
141 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
141 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
141 days ago
மார்க் ஆண்டனி படம் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்து அஜித்தின் ‛குட் பேட் அக்லி' படத்தை இயக்கினார். சமீபத்தில் இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனால் மீண்டும் அஜித் உடன் இணைந்து ஒரு படம் பண்ணப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தெலுங்கு பக்கம் போய் உள்ளார்.
தெலுங்கு சினிமாவின் மூத்த முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா. இவரின் படங்கள் தொடர்ச்சியாக மினிமம் கியாரண்டி உடன் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தால் ஈர்க்கப்பட்ட பாலகிருஷ்ணா திடீரென ஆதிக்கை அழைத்து பேசி உள்ளார். தனக்கு ஏதேனும் கதை உள்ளதா என அவரிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாலகிருஷ்ணாவுக்கு ஏற்ற அதிரடி ஆக் ஷன் கதை உடன் விரைவில் ஆதிக் அவரை சந்திக்கலாம் என்றும், விரைவில் இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
141 days ago
141 days ago
141 days ago