கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது
ADDED : 186 days ago
நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன், வாரணம் ஆயிரம், பீஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக அவர் இயக்குனராக களமிறங்கி இயக்கியுள்ள படம் ‛கிஸ்'. இதில் ஹீரோவாக கவின் நடித்துள்ளார். நாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடைபெற்று சமீபத்தில் நிறைவு பெற்றது. முழுக்க முழுக்க காதல் கதையில் இந்த படத்தை இயக்கி உள்ளார் சதீஷ். ஏற்கனவே இந்த படத்தை பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால் அந்த சமயம் பட பணிகள் முடியவில்லை. தற்போது ஜூலை மாதத்தில் படத்தை வெளியிடுவதாக புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.