கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
ஜெர்ஸி பட இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 12வது படமாக நடித்து வரும் படம் 'கிங்டம்' . இதில் கதாநாயகியாக பாக்யஸ்ரீ பரோஸ் நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இத்திரைப்படம் மே 30ம் தேதி அன்று திரைக்கு வருவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் சூழலால் இந்த படத்தின் புரோமொசன் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் படக்குழு ஒத்திவைத்தது. இதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வந்தது. இப்போது மே 30க்கு பதில் ஜூலை 4ம் தேதிக்கு ரிலீஸ் மாற்றப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.