உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி

ராம்சரண் நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் படம் பெத்தி. அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். புஜ்ஜி பாபு சனா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், டிரைலர் வெளியீட்டு விழா மே 16-ம் தேதி போபாலில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது போபாலில் நடைபெற்று வருகிறது. ஜூன் 4ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் சிவராஜ்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !