உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி

நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் சிம்ரன். அப்போது இளம் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்கள், சீனியர் நடிகர்களுடன் சில படங்கள் என உச்சத்தில் இருந்தார். திருமணமான பின் நடிப்பதை குறைத்துக் கொண்டார். மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தாலும் அவருக்கான சரியான படங்கள் அமையவில்லை. அந்த ஏக்கத்தை 'டூரிஸ்ட் பேமிலி' படம் மாற்றியுள்ளது. தமிழ் சினிமாவில் மீண்டும் அடுத்த கட்ட ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவும் அவர் தயாராக இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய புரமோஷன்களில் அவர் அதிகம் கலந்து கொள்ளவில்லை. வெளிநாட்டில் இருந்ததுதான் அதற்கு ஒரு காரணம். ஆனால், படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நடந்த போது அதில் கலந்து கொண்டு உருக்கமாகப் பேசினார் சிம்ரன்.

நிகழ்ச்சிக்கு சிம்ரன் வந்த போது அவருடன் டிவி நடிகை ஆனந்தியும் கூடவே வந்திருந்தார். சிம்ரனின் பெண் பவுன்சர் போல பக்கத்திலேயே இருந்தார். விசாரித்த போது சிம்ரனுக்கு கடந்த சில வருடங்களாக மேனேஜர் போல எப்போதும் துணையாக ஆனந்தி இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !