உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வார் 2 படத்தின் முக்கிய அப்டேட்

வார் 2 படத்தின் முக்கிய அப்டேட்

ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றியால் வார் 2 படம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் பிரமாண்ட பொருட்ச் செலவில் தயாரிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வார் 2 படத்தின் ஜுனியர் என்டிஆருக்கான அறிமுக டீசர் வருகின்ற மே 20ம் தேதியன்று ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !