உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சந்தானம் பட வழக்கு முடித்து வைப்பு

சந்தானம் பட வழக்கு முடித்து வைப்பு

சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் நேற்று வெளியானது. இந்த படத்தின் தலைப்புக்கு முதலில் முந்தைய தயாரிப்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' என்ற படத்தின் பெயரை 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' என்று மாற்றப்பட்டது.

பின்னர் படத்தில் இடம்பெற்ற, 'சீனிவாசா கோவிந்தா' என்ற பாடல் சர்ச்சைக்குள்ளானது, பாடலுக்கு பலதரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பாலாஜி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பாளர் தரப்பில், பாடல் வரியும், இசையும் படத்தில் இருந்து நீக்கி புதிய சென்சார் சான்றிதழ் பெறப்பட்டு, படம் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பிலும், திரைப்படத்தில் பக்தி பாடல் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !