உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர்

அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர்


நடிகை நிம்ரத் கவுர் நடித்த ‛குல்' வெப் தொடர் சமீபத்தில் வெளியானது. இதில் நிம்ரத் கவுரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: படத்தில் உடன் பிறந்தவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நிஜ வாழ்க்கையிலும், நான் என் தங்கையை பாதுகாப்புடன் பார்த்து வருகிறேன். அதேநேரத்தில் நான் சொல்வதை எல்லாம் தங்கையை செய்ய சொல்வதில்லை. நான் சந்தித்த பிரச்னைகள், போராட்டங்களை அவர் எதிர்கொள்ள கூடாது என நினைக்கிறேன். எனக்கு தெரிந்ததை எல்லாம் அவளிடம் சொல்வேன். என் தங்கை மிகவும் புத்திசாலி.


தற்போது நான் வெற்றிகரமான நடிகையாக மாறிவிட்டதால் என் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்; என்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறார்கள். ரசிகர்கள் என் அம்மாவுடன் புகைப்படம் எடுப்பதுடன், என்னைப்பற்றி கேட்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அமிர்தா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க விரும்புகிறேன். அவரது வாழ்க்கையை சிறந்த படமாக எடுக்க முடியும். அவரது கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும் என நினைக்கிறேன். மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய ஒரு கதை கிடைத்தால் நான் அந்தப் படத்தைத் தயாரிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !