இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்'
ADDED : 138 days ago
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள மாமன் திரைப்படம் மே 16ல் ரிலீசானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கோவையில் சூரி பேட்டியளிக்கையில், ‛‛ஓ.டி.டி., தளங்கள் வருகையால், தியேட்டர்களுக்கு படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சொல்வது தவறு. ஹீரோவாக நடிக்க கைவசம் படங்கள் இருப்பதால், இனி காமெடி பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பில்லை. 'வெண்ணிலா கபடிக்குழு' போன்ற கதை சொன்னால், கண்டிப்பாக ஹீரோவாக நடிப்பேன்'' என்றார்.