கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்!
ADDED : 141 days ago
கடைசியாக ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய ‛சிக்கந்தர்' என்ற படத்தில் நடித்திருந்தார் சல்மான்கான். மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சல்மான்கான், முருகதாஸ் இருவருமே ட்ரோல் செய்யப்பட்டார்கள்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அபூர்வா லக்கியா என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சல்மான்கான். இப்படம் 2020ம் ஆண்டில் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் பின்னணியில் உருவாக்கப்பட்ட ‛இந்தியாவின் மோஸ்ட் பியர்லெஸ்- 3' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது. வருகிற ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு லடாக் மற்றும் மும்பையில் 70 நாட்கள் நடைபெற உள்ளது. சல்மான்கான் ராணுவ அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அவருடன் மூன்று இளவட்ட நடிகர்களும் நடிக்க போகிறார்கள்.