ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக்
ADDED : 140 days ago
குட் பேட் அக்லி படத்திற்குபின் அஜித்தை வைத்து படம் இயக்கப்போகிறார் ஆதிக் ரவிசந்திரன். அதற்கான முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் என தகவல். இதற்கிடையே, அவர் தெலுங்கில் படம் பண்ணப் போகிறார். பாலகிருஷ்ணாவுக்கு கதை சொல்லப் போகிறார் என தகவல்கள் கசிகின்றன. அதெப்படி என்று கேட்டால், கார் ரேசில் ஆர்வமாக இருக்கிறார் அஜித். இந்த மாதம் நவம்பர் மாதம் தான் சினிமாவுக்கு திரும்ப உள்ளார். அதனால், அந்த 6 மாத இடைவெளியில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கலாம். சில கோடி சம்பளம் வாங்கலாம் என கணக்கு போடுகிறாராம். அதேபோல் அஜித்துக்காக காத்திருக்கும் இயக்குனர் சிவாவும், ஒருவேளை அஜித் படம் கிடைக்காவிட்டால், கார்த்தியை வைத்து படம் இயக்கலாம். அதற்கான கதை தயார் செய்யலாம் என்ற யோசனையில் இருக்கிறாராம்.