உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதையல் கதையில் நாக சைதன்யா

புதையல் கதையில் நாக சைதன்யா

'தண்டேல்' படத்தின் வெற்றிக்கு பிறகு, புதையலை தேடிச் செல்லும் பேண்டசி அட்வென்ஜர் படத்தில் நடிக்கிறார் நாக சைதன்யா. 'என்.சி.24' (நாக சைதன்யா 24) என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கார்த்திக் வர்மா தண்டு இயக்குகிறார். இவர் அமானுஷ்யம் நிறைந்த 'விருபாக்ஷா' படத்தை இயக்கியவர். இந்த படமும், புராணத்தோடு தொடர்புடையதாகவும், மர்மங்கள் நிறைந்ததாகவும் உருவாக இருக்கிறது. இதில் நாக சைதன்யா, புதையல் வேட்டைக்காரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !