உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன்

அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன்

புஷ்பா 2 படத்தை அடுத்து அட்லி இயக்கும் தனது 22வது படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் அல்லு அர்ஜுன். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடிக்கப் போகிறார். ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படும் இந்த படம் 2026ம் ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், ஜூலை மாதம் அல்லு அர்ஜுன் அமெரிக்கா செல்ல இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ஜூலை மாதத்தில் எட்டாவது தெலுங்கு சம்பரலு என்ற நிகழ்ச்சி வட அமெரிக்காவில் நடைபெறுகிறது. தெலுங்கு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளதாம். இதில் அல்லு அர்ஜுன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளப் போகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !