உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி

சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து கடந்த 16ம் தேதி திரைக்கு வந்த படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்ற சீனிவாசா கோவிந்தா என்ற பாடல் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். அதையடுத்து படக்குழு, அந்த பாடல் வரிகளும், இசையும் படத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். அதையடுத்து திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த டிடி நெக்லஸ் லெவல் படம், நான்கு நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

அதேபோல் இதே மே 16ம் தேதி சூரி நாயகனாக நடித்து திரைக்கு வந்த படம் மாமன். அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் திரைக்கு வந்து நான்கு நாட்களில் 12 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் தெரிவிக்கிறது.

அந்தவகையில் வசூலில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளி உள்ளார் சூரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !